வெகு நாட்களுக்கு பிறகு ரிலீஸை உறுதி செய்தது ஜீவாவின் ‘கீ’ படக்குழு!!!
தமிழா சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக மிகப்பெரிய வெற்றிக்கு போராடி வருகிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் அடுத்ததாக ‘கீ’ எனும் படம் தயாரானது. இப்படத்தினை குளோபல் என்டர்டெயின்ட்மெயின்ட் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். காலீஸ் என்பவர் இயக்கி உள்ளார் .
இந்த படத்தில் நிக்கி கலாராணி ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி காமெடி ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் ஆன்லைன் காரைம் பற்றி ‘இரும்புத்திரை’ படம் போல அமைந்திருந்தது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நன்றாக இருந்தது. ஆனாலும் ரிலீஸ் தேதி வெகுநாட்களாக அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது இப்படம் ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU