மன்னர் வகையறா படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய இயக்குனர் பூபதி பாண்டியன், தனக்கும், விமலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதுபற்றி கூறினார். இதுபற்றி பூபதி பாண்டியன் கூறியது: என் டைரக்ஷனில் நடித்த தனுஷ், விஷால் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாகி விட்டார்கள். விமலும் தயாரிப்பாளராகியிருக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது நிறைய நடிகர்களுக்கு சரியாக வேட்டி கட்டவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நம் பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு பாடல் காட்சியின்போது எனக்கும் விமலுக்கும் சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2 நாட்கள் பேசாமல் இருந்தோம்.
பின்னர்தான் பேசாமல் இருந்ததைவிட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தோம். இந்த படத்தில் பிரபு, பொன்வண்ணன், ரோபோ சங்கர், தமிழரசன், சிங்கம் புலி, யோகி பாபு ஜெயபிரகாஷ், சரண்யா, சாந்தினி, நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர்’என்றார். ஹீரோயின் ஆனந்தி பேசும்போது,’இப்படத்தில் காமெடி நிறைய ட்ரை செய்திருக்கிறேன். இயக்குனரின் காமெடி டைமிங் பார்த்து அசந்துபோன நான் உங்களிடம் கொஞ்ச நாட்கள் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறேன் என வாய்ப்பு கேட்டேன்’ என்றார்.
source: dinasuvadu.com
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…