snehan - Kavin [File Image]
தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருவி, வாழ்த்து மற்றும் டாடா ஆகிய படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ஆண்டனி, தற்போது நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
ரூல்ஸை முறையாக கடைபிடித்து இந்த விளையாட்டை சுவாரஸ்யமாக விளையாடிய அவர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், இதற்காக பிரதீப் விளக்கம் கேட்கலாம் என்றும், அவரை வெளியேற்றியது நியாயமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பரான கவின் தனது இன்ஸ்டா பக்கத்தில், “உன்னை தெரிந்தவர்களுக்கு, உன்னை நன்றாகவே தெரியும்” என ஆறுதல் கூறியுள்ளார்.
இதே போல், பிக்பாஸ் முதல் சீசன் கவிஞருமான சினேகன், நீ பார்க்காத ரணங்களும் இல்லை, நீ பார்க்காத வலிகளும் இல்லை பிரதீப். “இதுவும் கடந்துபோகும்” வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை, வெளியே கிடக்கு வா என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பிரதீப் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறினாலும், அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பலர் ஒட்டுமொத்த டைட்டில் வின்னர் ஆக தகுதியான ஒரு போட்டியாளரை அநியாயமாக வெளியேற்றியுள்ளனர் என்றெல்லாம் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
பிரதீப் ஆண்டனி தன்னுடைய சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதம் மற்றும் தொடர்ச்சியாக சில தேவையில்லாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தி வந்த காரணத்தால் அவர் மீது போட்டியாளர்கள் குற்றம் சாட்டி வந்தார்கள்.
இதனையடுத்து, பிக் பாஸ் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருந்தாலும், இந்த சீசனில் ஒரு வலுவான போட்டியாளராக பல ரசிகர்களை பெற்று கொண்ட பிரதீப் ஆண்டனி இந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 தமிழ் மற்ற சீசன்களை போல பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த 7-வது சீசன் சற்று மொக்கையாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் வழக்கமாக வீட்டிற்கு வாரம் வாரம் நடக்கும் எலிமினேஷனும், சண்டைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…