நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய கவின் பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ் 3’ மூலம் புகழ் பெற்றார்.
டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கிறார். கவின் நடிக்கும் தனது நான்காவது படமான ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படக்குழு 2024 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 14 ஆம் தேதி படத்தை வெளியிட திமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே, பியர் பிரேமா காதல் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிய இளன் கண்டிப்பாக இந்த படத்தையும் இளைஞர்களை கவரும் வகையில் எடுத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ப்ரோமஷன் பணிகள் 2024ல் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்புக்கு ஆறுதல் சொன்ன கவின்-சினேகன்!
இதற்கிடையில், அவரது ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் மூலம் நடன இயக்குனர் நடிகர் சதீஷ் கிருஷ்ணனின் இயக்குனராக அறிமுகமாகிறார்.
விடுதலைக்காக என்ட்ரி கொடுத்த அசுரன் சிதம்பரம்.! அப்போ விஜய் சேதுபதி மகன்?
கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடிக்க மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் அனிருத் இசையமைப்பதுதான்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…