Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் கவின். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான டாடா படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்த நிலையில், அந்த வெற்றியை தொடர்ந்து அவர் ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 10-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிற நிலையில் கவின் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகர் கவின் ” உண்மையாகவே சொல்லவேண்டும் என்றால் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நடித்தது. ஒரு முறை என்னை நேரில் சந்தித்து பேசினார்கள். ஒரு சின்ன மீட்டிங் நடைபெற்றது. அந்த மீட்டிங் முடிந்த பிறகு என்னிடம் அதனை பற்றி எந்த தகவலும் பேசவில்லை என்னாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனென்றால், நான் கமிட் ஆகியுள்ள படங்களை பற்றி நீங்களே பார்த்து இருப்பீர்கள்.
எனவே, தற்போது அடுத்த அடுத்து படங்களில் நான் நடிக்க கமிட் ஆகி இருப்பதன் காரணமாக என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. முதல் மீட்டிங் உடன் அந்த பேச்சுவார்த்தை அப்படியே நின்றுவிட்டது. ஜேசன் சஞ்சய் அப்படியே விஜய் சார் மாதிரி தான் இருக்கிறார். குணத்திலும், பேச்சிலும் அந்த அளவுக்கு ரொம்பவே அமைதியாக இருக்கிறார். நான் தான் விஜய் சாருடைய மகன் அவரிடம் எப்படி பேசப்போகிறோம் என்பது போல யோசித்து கொண்டு சென்றேன். ஆனால், நான் நினைத்து பார்த்ததை விட அவர் ரொம்பவே எளிமையாக இருக்கிறார். இதனை எல்லாம் பார்க்கும்போது தான் அவர்களே எப்படி இருக்கிறார்கள் நம்மளும் அப்படி தான் எளிமையாக இருக்கவேண்டும் என்று தோணும்” எனவும் நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். அந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கவின் இந்த படத்தில் நடிக்காதது இப்போது தெரிய வந்துள்ள நிலையில், வேறு எந்த ஹீரோ நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…