நாளை கவினின் ‘ஸ்டார்’ உடன் மோதும் திரைப்படங்கள்.!

ameer kavin

கடந்த சில வாரங்களாக தமிழில் புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் ஏதும் இல்லாததால், மந்தமாக இருந்தது. ஆனால், பழைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் மறு வெளியீடு ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்துள்ளது.

இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும், நாளை (10ம் தேதி) வெள்ளிக்கிழமை சில புதிய தமிழ் படங்கள் வெளியாகின்றன. நாளை மூன்று தமிழ்ப் படங்களைப் பற்றி பார்க்கலாம்.

அதன்படி, தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குநராக அறிமுகமாகும் ‘உயிர் தமிழுக்கு’ படம்,  அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘ரசவாதி’ படமும், கவினின் ‘ஸ்டார்’ படமும் நாளை திரைக்கு வருகின்றன.

இதில், ‘ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், ஸ்டார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்

இயக்குனர் இளன் இயக்கிய ஸ்டார்’ படத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சினிமா நட்சத்திரமாக ஆசைப்படும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைப் பற்றி எடுத்துரைக்கும் இந்த படத்தில் கவின் டைட்டில் ரோலில் நடித்துள்ளார்.

ரசவாதி

இயக்குனர் சாந்தகுமாருடன் அர்ஜுன் தாஸ் கைகோர்த்துள்ள ‘ரசவாதி’ படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்கும்.கொடைக்கானல் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

உயிர் தமிழுக்கு

இயக்குனராக இருந்து நடிகராக மாறிய அமீர், சமீப காலமாக துணை வேடங்களில் நடித்து வந்தார். இப்பொது, ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கிய, இந்த படம் ஒரு அரசியல் த்ரில்லராக நிறைந்து இருக்கும். இந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெளியாகுவதால் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்