நடிகை கஸ்தூரி மீது சாதி கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, வேலூர் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி விழுப்புரம் வெள்ளம்புத்தூரில் மர்ம கும்பல் கிராமத்தில் சிறுவனை அடித்து கொலை செய்ததோடு, தாயை அடித்து துன்புறுத்தி சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்க பதிவில் ஒரு குறிப்பட்ட சமூகத்தை நேரடியாக குறிப்பிட்டு குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பட்ட சமூகத்திற்கு எதிராக பேசிய நடிகை கஸ்தூரியால் சாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவர் மீது நடவடிகை எடுக்கும் படி ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் ஜானகிராமன் என்பவர் புகார் அளித்தார். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்ததால், நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி ஜானகிராமன் ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…