இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.
ஒரு சில சர்ச்சைகள் வந்தாலும், படம் அருமையாக இருந்ததால் படத்திற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் வந்தது. இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதையும் படியுங்களேன்-அண்ணன் வடிவேலுவுக்கு ஒரு தேசிய விருது பார்சல்.! புகழ்ந்து தள்ளிய உதயநிதி.!
அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், அவர் இயக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அவர் இயக்கும் அடுத்த படத்திற்கு “தி வேக்சின் வார்” TheVaccineWar என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதற்கான போஸ்டர் ஒன்றையும் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போஸ்ட்ரை பார்க்கையில், இது தடுப்பூசி பற்றிய உண்மைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த “தி வேக்சின் வார்” திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி 11 மொழிகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…