சிவகுமார் கண்டிக்க மாட்டாரா? ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்கணும் – கரு. பழனியப்பன் காட்டம்!

Karu Palaniappan about paruthiveeran issue

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை திருடன் என கடுமையாக தாக்கி பேசிய பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன்,  சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். இந்த விவகாரம் பற்றி ஞானவேல் ராஜாவும் இதுவரை ஒன்றும் பேசாமலும் இருக்கிறார். 

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இயக்குனர் கரு. பழனியப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார், தயாரிப்பாளர் கணேஷ்ரகு , சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்குரா, என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்.. சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள். நிற்க. இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல.

பருத்திவீரன் விவகாரம்: வேண்டாம் தரம் தாழ்ந்த மனநிலை! ஞானவேலுக்கு எச்சரிக்கை விடுத்த பொன்வண்ணன்!

ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி தான். பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே. நான் சொல்லுகிறேன். இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி. இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள் .

பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம். ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில், நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம் 25 படங்களை கடந்து விட்டோம் ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும் ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.
பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும்.

இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, திரு சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன? 18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா?

ஞானவேல் ராஜா வன்மமான வார்த்தைகள் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுங்க! வேண்டுகோள் விடுத்த சசிகுமார்!

நூறு குறள்கள் படித்த சிவக்குமார் “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை” என்ற குறளையும் படித்து இருப்பார். வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்” என மிகவும் காட்டத்துடன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ” பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. கணக்கு வழக்கில் அதிகம் பணம் காட்டி என்னை அமீர் ஏமாற்றிவிட்டார்.பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதன் காரணமாக தான் இந்த விவகாரம் தற்போது பெரிய அளவிற்கு வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்