karthi Vaa Vaathiyaar Poster [Image source : X/Studio Green ]
வா வாத்தியார்: கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 26வது படமான வா வாத்தியார் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ப்ருதிவீரனில் அறிமுகமாகி பல தரமான கதைக்களங்களை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வளம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
நேற்று 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி , அரவிந்த்சாமி நடிக்கும் மெய்யழகன் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றது. பருத்திவீரன், கொம்பன் படங்களுக்கு பிறகு ஓர் அழகான கிராமத்து கதையில் கார்த்தி நடிக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தை சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து தற்போது அவரின் அடுத்த பட போஸ்டர் வெளியாகி உள்ளது. நலன் குமாரசாமி இயக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கிறது. வா வாத்தியார் என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் எம்ஜிஆர் வேடம் அணிந்தவர்கள் பின்னடி இருக்க காவல்துறை உடை போல ஓர் உடை அணிந்து கார்த்தி நிற்பது போல போஸ்டர் உள்ளது.
2016இல் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படம் என்பதாலும், கார்த்தி நடித்த கடைசி படமாக ஜப்பான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதாலும் வா வாத்தியாராக எம்ஜிஆர் ரசிகராக களமிறங்கிய கார்த்தி கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கார்த்தி கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…