கார்த்தியுடன் ஜாலியாக சுற்றும் அரவிந்த் சாமி! வெளியானது புது பட பர்ஸ்ட் லுக்!
கார்த்தி : நடிகர் கார்த்தியின் 27-வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
96 திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரேம் குமார் தற்போது நடிகர் கார்த்தியின் 27-வது திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தன் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் அரவிந்த் சாமி, நடிகை ஸ்ரீ திவ்யா இன்னும் சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா பெயரை தவிர படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயரை வெளியிடாமல் படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் தலைப்பு இன்று வெளியாவதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் தலைப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் நடிகர் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த் சாமி சைக்கிளில் பேசி கொண்டு செல்வது போல காட்சி இடம்பெற்றுள்ளது. படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிற தொடங்கி இருக்கிறது. இந்த அப்டேட்டை தொடர்ந்து அடுத்ததாக படத்தில் நடிக்கும் பிரபலங்கள், பாடல்கள், டீசர், ட்ரைலர் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
One from our Hearts..! #Meiyazhagan #மெய்யழகன் @Karthi_Offl #Arvindswamy #PremKumar #Jyotika #GovindVasantha @SDsridivya @rajsekarpandian @2D_ENTPVTLTD @SakthiFilmFctry pic.twitter.com/yxee04Bq8D
— Suriya Sivakumar (@Suriya_offl) May 24, 2024