கார்த்திக்கு கதை கூறி காத்திருந்த இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, தற்போது விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம்.
ஜெயம் ரவியை கதயநாயகனாக வைத்து 2018இல் வெளியாகி நல்ல வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் அடங்காமறு. இந்த திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்கிற புது முக இயக்குனர் இயக்குகி இருந்தார். நல்ல வெற்றியை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து மீண்டும் ஒரு பெரிய ஹீரோவிடம் கதைகூறும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி, நடிகர் கார்த்தியிடம் இவர் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். ஆனால், கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் படங்களில் பிசியாகி விட்டதால், கார்த்திக் தங்கவேலு படம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது வெளியான தகவலின்படி, கார்த்திக் தங்கவேலு, விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளராம். இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவன கதிரேசன் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.
கார்த்திக் தங்கவேலு, கார்த்திக்க கூறிய கதையைத்தான் விஷாலுக்கு கூறினாரா இல்லை, வேறு கதையா என தெரியவில்லை. விரைவில் அந்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…