கார்த்திக் சுப்புராஜ் – தனுஷ் கூட்டணி! வாழ்த்து தெரிவித்த செல்வராகவன்!
இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளார். இப்படத்தினை இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் மனதிற்கு நெருக்கமான கதையை, படமாக்கி உங்களிடம் சமர்ப்பிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். மேலும், படக்குழுவினர் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு இயக்குனர் செல்வராகவன் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.