சென்னை : பாடகி சுசித்ராவுக்கு கார்த்திக் குமார் வீடியோ வெளியீட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல பாடகியான சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் பற்றியும் பேசியது பேசும்பொருள் ஆகி இருக்கிறது. பேட்டியில் பேசி இருந்த பாடகி சுசித்ரா ” கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக பழகி வந்த சமயத்தில் ஒரே ரூமுக்குள் செல்வார்கள்.
அங்கு என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும் எனவும்” வெளிப்படையாகவே பேசி இருந்தார். இவர் பேசி இருந்தது கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் சுசித்ராவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சுசித்ரா பேசியதற்கு வீடியோ வெளியீட்டு கார்த்திக் குமார் பதிலடி கொடுத்துள்ளார். வீடியோவில் பேசிய கார்த்திக் குமார் ” நான் உண்மையில் ஓரின சேர்க்கையாளராக இருந்தேன் என்றால் அதனை வெளியில் சொல்வதில் கூச்சம்படவே மாட்டேன். அப்படி இருந்தால் நான் தைரியமாக நான் சொல்வேன்.
ஏனென்றால், அதை பெருமையாகவே தான் நினைப்பேன். ஆனால், நான் அப்படி இல்லை. நகரங்களில்ஓரினசேர்கையாளர்களுக்காக நடக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் எங்கே நடந்தாலும் நான் கலந்து கொள்வேன். ஆனால், அதற்காக நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக இருந்தால் போதும். இது அவமானம் எதுவும் இல்லை பெருமை என்று தான் நான் சொல்வேன்” என்று கார்த்திக் கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…