நான் அப்படி பேசுபவன் இல்லை! பரவும் ஆடியோவுக்கு கார்த்திக் குமார் விளக்கம்!

karthik kumar

சென்னை : குறிப்பிட்ட சமூகத்தை பற்றி நான் பேசுவதாக பரவும் ஆடியோ நான் பேசியது அல்ல என கார்த்திக் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

யாரடி நீ மோகினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திக் குமார் பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற விஷயம் அனைவர்க்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

அது என்னவென்றால், நடிகர் கார்த்திக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு பின்பு குறிப்பிட்ட சமூகம் ஒன்றை இழிவுபடுத்தி பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி இருந்தது இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, பலரும் கார்த்திக்குமார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சுழலில் இதற்கு நடிகர் கார்த்திக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர் ” நான் பேசியதாக பரவி கொண்டு இருக்கும் அந்த ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல் இல்லை. நான் எப்போதுமே அந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தவே மாட்டேன்.

உண்மையில் நான் அப்படி பேசுபவர் கிடையாது நீங்கள் நான் சொல்வதை நம்பவில்லை என்றால் கூட பரவாயில்லை. உங்களுக்கு எதை நம்ப தோணுகிறதோ நீங்கள் அதையே நம்பி கொள்ளுங்கள்” என்று கார்த்திக்குமார் கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ச்சியாக நெட்டிசன்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து கொண்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Karthik Kumar (@evamkarthik)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay