விருமன், பொன்னியின் செல்வன், சர்தார், ஆகிய மூன்று படங்களின் வெற்றிகளை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடிக்கிறார். கார்த்தியின் 25-வது திரைப்படமாக உருவாகி இந்த திரைப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை அணு இம்மானு வேல் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. தற்பொழுது விறுவிறுப்பாக படப்பிடிப்பும் அங்குதான் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 5மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் போதையுடன் கார்த்தி சோபாவில் படுத்திருக்கிறார். பின்னாடி இருக்கும் போட்டோவில் கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். கீழே மதுபாட்டிலுடன் இரண்டு பெண்கள் அமர்ந்திருப்பதுபோல கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் கார்த்தியின் லுக்கை பார்க்கையில், இதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தின் ராக்கெட் ராஜா கெட்டப் போல இருக்கிறது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…