ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்து வரும் ஜப்பான் திரைப்படமும், தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கார்த்திக்கு கடைசியாக வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று அவருக்கு மார்க்கெட்டை உயர செய்தது. அதைப்போல தனுஷிற்கு கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
எனவே, இவர்கள் இருவரின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானால் கண்டிப்பாக போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதற்கு முன்பே கடந்த 2016-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த கொடி திரைப்படமும். கார்த்தி நடித்த காஷ்மோரா திரைப்படமும் ஒரே தினத்தில் வெளியானது. இதில் கொடி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…