நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா , மற்றும் கார்த்தி இருவருமே பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தங்களுக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட்டார்கள். இவர்கள் இருவரும் ஒரு நல்ல அண்ணண் தம்பி எப்படி இருப்பார்களோ அதே போலவே இருந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும்.
இருவரும் எதாவது விருது விழாவில் கலந்துகொண்டால் நக்கலாக பேசி மாற்றி மாற்றி சிறிய வயதில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொள்வது உண்டு. அந்த வகையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி தன்னுடைய அண்ணன் சூர்யா தன்னை முதல் முறையாக கட்டியணைத்து பாராட்டிய காரணம் மற்றும் அழகான அந்த சம்பவம் குறித்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
என்னை விட கார்த்தி தான் சிறந்தவன்! மேடையில் மனம் திறந்து தம்பியை பாராட்டிய சூர்யா!
கார்த்தி பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இந்த படம் வெளியாவதற்கு முன்பு பண ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததாம். இதனால் படம் இரண்டு முறை ரிலீஸ் ஆகாமல் போனதாம். அந்த சிக்கல்களை சரி செய்ய சூர்யா தான் தன்னுடைய பணத்தை போட்டுவிட்டு ரிலீஸ் செய்ய உதவினாராம். படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்தி படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற யோசனையில் தூங்கி கொண்டு இருந்தாராம்.
அப்போது சூர்யாவை எழுப்பி படம் ரிலீஸ் ஆகா போகிறது படம் நன்றாக இருகிறது என கூறினாராம். எடுத்தவுடன் படத்தை பார்க்க சூர்யாவுக்கு நேரம் இல்லை என்ற காரணத்தால் படத்தை பார்க்காமலே இருந்தாராம். அதன் பிறகு தான் ரிலீஸ் செய்ய பிரச்சனை வந்தவுடன் பிரச்சனையை பணம் கொடுத்து முடித்துவிட்டு படம் பார்த்தாராம்.
படம் பார்த்தவுடன் நடிகர் சூர்யாவுக்கு படம் மிகவும் பிடித்து போக கார்த்தியை கட்டியணைத்து பாராட்டினாராம். அது தான் சூர்யா பாசத்துடன் கார்த்தியை கட்டியணைத்து பாராட்டியது முதல் முறையுமாம். இதனை தன்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என இந்த தகவலை கார்த்தியே தெரிவித்து இருக்கிறார். மேலும், சூர்யா கார்த்தி இருவரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கவேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கைதி 2-வில் அது நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…