கார்த்திக்கும் தீபாவளிக்கும் ஏதும் ராசி இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், கார்த்தி நடிக்கும் படங்கள் எல்லாம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10 ஆம் தேதி) உலக முழுவதும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தற்போது, இதுவரை தீபாவளியை முன்னிட்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘பிகில்’ படத்துடன் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் வெளியாகி இருந்தது. பிகில் திரைப்படம் வசூலை குவித்தாலும், கைதி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியா ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, கார்த்தி கேரியரில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக மாறியது.
ஜப்பான் திரைப்படத்தை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதுபோல், கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்துடன் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில், சர்தார் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று ரூ.100 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்தது. இது, அவருக்கு இரண்டாவது முறையாக ரூ.100 கோடி வசூல் செய்த திரைப்படமாக மாறியது.
அந்த வகையில், இந்த இந்தாண்டும் தீபாவளியை முன்னிட்டு, ஜப்பான் திரைக்கு வருகிறது. இந்த படத்துடன் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படமும் விக்ரம் பிரபு நடித்துள்ள “ரெய்டு” திரைப்படமும் வெளியாகவுள்ளதால் தீபாவளிக்கு கடுமையான போட்டி நிலவும் என கூறப்படுகிறது. இந்த முறையும் ரூ.100 கோடி வசூல் செய்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…