உண்மை சம்பவ கதையில் கார்த்தி.? நகை கடை கொள்ளை.. தீபாவளி சரவெடியாய் வெடிக்கும் ஜப்பான்.!

Japan Teaser

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘சர்தார்’  திரைப்படம் ரசிகர்களுக்கு  மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் அனு இம்மானுவேல், சுனில், பாவா செல்லதுரை உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ட்ரீம்ஸ் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  ஏற்கனவே படத்தின் முதல் தோற்ற வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது படத்திற்கான டீசரை பட குழு வெளியிட்டுள்ளது டீசரில் வரும் காட்சிகள் அனைத்தும் பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. கண்டிப்பாக டீசரை வைத்து பார்க்கையில் படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த டீசரில் வரும் காட்சியை போல சில வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் ஒரு பிரபல நகைக்கடையில் கொள்ளை கும்பல் சுவரைத் துளையிட்டு கிலோ கணக்கினான தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது . பின்னர் தமிழக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து சுமார் 10 பேர் கொண்ட அந்த கொள்ளை கும்பலை கைது செய்தனர்.

எனவே இந்த சம்பவத்தை வைத்து தான் ஜப்பான் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. உண்மையில் படம் அந்த சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டதா இல்லையா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்