ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பட்டையை கிளப்பி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 2022ஆம் ஆண்டு வெளியான இந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் சப்தமி கவுடா, மானசி சுதிர், கிஷோர் குமார் ஜி, ஸ்வராஜ் ஷெட்டி, அச்யுத் குமார், வினய் பிடப்பா, ஷைன் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தினை கேஜிஎப் படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எல்லா மொழிகளிலும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் ரீதியாக 360 கோடிகள் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் பரவி வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முத்தம் அவர் கூட தான் நடந்துச்சு! உண்மையை உளறிய பிரியா பவானி சங்கர்!
அதன்படி, ‘காந்தாரா’ படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ‘காந்தாரா 2’ என்று தலைப்பு வைக்காமல் காந்தார அத்தியாயம்1 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 27 அன்று சரியாக மதியம் 12:25 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த முறை காந்தார அத்தியாயம் 1 இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், கடந்த முறை முதலில் கன்னம், தெலுங்கு, ஹிந்தியில் தான் வெளியானது. அதன் பிறகு வரவேற்பு அதிகமாக இருந்த காரணத்தால் தான் ஒவ்வொரு மொழிகளிலும் வரிசையாக வெளியானது. ஆனால், இந்த முறை ஒரே நேரத்தில் படம் எல்லா மொழிகளிலும் வெளியாகும்.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…