கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த திரைப்படம் கடந்த . 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் சப்தமி கவுடா, மானசி சுதிர், கிஷோர் குமார் ஜி, ஸ்வராஜ் ஷெட்டி, அச்யுத் குமார், வினய் பிடப்பா, ஷைன் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எல்லா மொழிகளிலும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் ரீதியாக 360 கோடிகள் வசூல் செய்திருந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் 27 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்படும் இருந்தது.
கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்திட்டாங்க! நடிகை மஹிமா நம்பியார் வேதனை!
இந்நிலையில், முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்ததை போல தற்போது “காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1” படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் டீசராக வெளியிட்டுள்ளது. அதில் முதல் பாகத்தில் வரும் காட்சிகள் வருகிறது. பிறகு ரிஷப் ஷெட்டி மிகவும் பயங்கரமான லுக்கில் பார்க்கிறார். அவருடைய கண்களில் இருந்து நெருப்புடன் ‘காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ என்று வருகிறது.
இந்த ‘காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த அளவுக்கு லுக் வகையில் பார்க்கும்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எல்லா மொழிகளிலும் அதிகரித்துத்துள்ளது. டீசரை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மேலும், இந்த முறை ‘காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கடந்த முறை முதலில் கன்னம், தெலுங்கு, ஹிந்தியில் தான் வெளியானது. அதன் பிறகு வரவேற்பு அதிகமாக இருந்த காரணத்தால் தான் ஒவ்வொரு மொழிகளிலும் வரிசையாக வெளியானது. ஆனால், இந்த முறை ஒரே நேரத்தில் படம் எல்லா மொழிகளிலும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…