யுவனின் இசையில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ ரிலீஸ் அப்டேட்!!!
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமானது, இம்மாதம் 22ஆம் தேதி வெளிமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU