கன்னடத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்…பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்த ராக்கி பாய்.!
பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ தொடங்கி வைத்தார். அது மட்டுமின்றி, நேற்று கன்னட சினிமாவில் இருக்கும் சில பிரபலங்களை நேரில் அழைத்து விருந்து கொடுத்தார்.
நேற்று இரவு ராஜ மாளிகையில் கேஜிஎப் புகழ் யாஷ், காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, ஹோம்பாளே ஃபிலிம்ஸ் விஜய் கிரிகந்தூரு, அஷ்வினி புனீத் ராஜ் குமார், ஆர் ஜெ ஷ்ரத்தா ஆகியோர் நேரில் பிரதமரை சந்தித்து இரவு விருந்து முடிந்தவுடன் சிலர் பிரதமரிடம் கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.
அதன்படி, விருந்து முடிந்த பிறகு கன்னட சினிமாரங்கம் பற்றி அனைவரும் பேசியுள்ளனர். ரிஷப் மற்றும் யஷ் இருவரும் கன்னடத் திரையுலக வளர்ச்சிகள் பற்றி ஆலோசித்தனர். மிக அதிகமாக வரி கட்டும் திரையுலகம் நமக்கு இல்லை நல்ல வசதிகள் எங்கள் இண்டஸ்ட்ரிக்கு கிடைக்க வேண்டும் என ஹோம்பாளே தயாரிப்புகள் விஜய் கிராகந்தூருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிறகு, கர்நாடகத்தில் திரைப்பட சிட்டி வர வேண்டும். ஃபாரின் உள்ளபடி எங்கள் திரையுலகிலும் வசதிகளை வழங்குமாறும் , கன்னடத் திரையுலகத் தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அதிக வேலை கிடைக்க வேண்டும், பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும்” பிரதமர் மோடியிடம் யாஷ் வேண்டுகோள் வைத்துள்ளார்.