பிரதமர் மோடியை சந்தித்த கன்னட திரையுலக பிரபலங்கள்..வைரலாகும் புகைப்படங்கள்.!

Default Image

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை காந்தாரா’ திரைப்பட இயக்குநர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எஃப் திரைப்படத்தின் கதாநாயகன் யாஷ் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கன்னட சினிமாவில் இருக்கும் சில பிரபலங்களைச் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜ மாளிகையில் ராக்கிங் ஸ்டார் யாஷ், ரிஷப் ஷெட்டி, ஹோம்பாளே ஃபிலிம்ஸ் விஜய் கிரிகந்தூரு, அஷ்வினி புனீத் ராஜ் குமார், ஆர் ஜெ ஷ்ரத்தா ஆகியோரை  சந்தித்துள்ளார்.

நேற்று இரவு ராக்கிங் ஸ்டார் யாஷ், ரிஷப் ஷெட்டி, ஹோம்பாளே ஃபிலிம்ஸ் விஜய் கிரிகந்தூரு, அஷ்வினி புனீத் ராஜ் குமார், ஆர் ஜெ ஷ்ரத்தா ஆகியோருக்கு இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும்,  மோடியை அவர்கள் சந்தித்துக்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சந்திப்பின் போது ரிஷப் மற்றும் யாஷ் இருவரும் கன்னடத் திரையுலக வளர்ச்சிகள் பற்றி ஆலோசித்தனர். மிக அதிகமாக வரி கட்டும் திரையுலகம் நமக்கு இல்லை நல்ல வசதிகள் எங்கள் இண்டஸ்ட்ரிக்கு கிடைக்க வேண்டும் என  ஹோம்பாளே தயாரிப்புகள் விஜய் கிராகந்தூருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி  இன்று பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14-வது ஏரோ இந்தியா 2023-ஐ  தொடங்கிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்