14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.
சுமார் 14.8 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில், நடிகை ரன்யா ராவ் டிஆர்ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான ரான்யா, துபாயிலிருந்து நேற்று புறப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோத தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் அவரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை ரான்யா ராவ், கிச்சா சுதீப்புடன் மாணிக்யா உள்ளிட்ட கன்னடப் படங்களிலும், ‘பதாகி’ மற்றும் ‘வாகா’ போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
தகவலின்படி, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் ஒன்றல்ல, இரண்டல்ல, 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது. மேலும், நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்த நடிகை, நாகவாராவில் உள்ள டிஆர்ஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த விசாரணையில் தங்கம் தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நடிகை ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்வார்கள். அதுமட்டுமின்றி, அதிக அளவு தங்கம் இருந்ததால் நடிகைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.