சாலை விபத்தில் ஒற்றை காலை இழந்த கன்னட நடிகர்.!

ஊட்டியில் இருந்து மைசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் வலது காலை இழந்தார் அறிமுக கன்னட நடிகர் சூரஜ் குமார். முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போது மைசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ஸ்ரீனிவாஸின் மகனான நடிகர் சூரஜ் குமார், இதற்கு முன்பு ஐராவதம் மற்றும் தாரக் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து ரத்தம் என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில், பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் மருத்துவமனையில் நடிகரை சந்தித்தனர்.