KanguvaTeaser நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. இந்த திரைபடத்தை பார்க்க தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
படத்தில் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், தற்போது VFX வேலைகள் மற்றும் டப்பிங் வேலைகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என திடீர் அப்டேட் விட்டு படக்குழு எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தது. அறிவித்ததன் படியே படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் வரும் காட்சிகள் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக இருக்கிறது என்றே கூறலாம். டீசரில் வரும் பின்னணி இசையையும் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.
அத்துடன் டீசர் கட் மற்றும் சூர்யா பேசும் வசனங்களும் நன்றாக இருக்கிறது. டீசரை பார்த்த பலரும் எம்மாடி காட்சி எல்லாம் பிரமாண்டமாக இருக்குது என்று கூறி வருகிறார்கள். மேலும், படத்தின் டீசர் வெளியாகிவிட்டட் நிலையில், விரைவில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…