மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

KanguvaSizzle

KanguvaTeaser நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “கங்குவா”. இந்த திரைபடத்தை பார்க்க தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

படத்தில் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த நிலையில், தற்போது VFX வேலைகள் மற்றும் டப்பிங் வேலைகள் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

இதற்கிடையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என திடீர் அப்டேட் விட்டு படக்குழு எதிர்பார்ப்பை எகிற வைத்து இருந்தது.  அறிவித்ததன் படியே படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் வரும் காட்சிகள் எதிர்பார்த்ததை விட பிரமாண்டமாக இருக்கிறது என்றே கூறலாம்.  டீசரில் வரும் பின்னணி இசையையும் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.

read more- பட வாய்ப்பு போனதற்கு காரணமே அவன் தான்! வேதனையில் பகீர் தகவலை சொன்ன கிரண்!

அத்துடன் டீசர் கட் மற்றும் சூர்யா பேசும் வசனங்களும் நன்றாக இருக்கிறது. டீசரை பார்த்த பலரும் எம்மாடி காட்சி எல்லாம் பிரமாண்டமாக இருக்குது என்று கூறி வருகிறார்கள். மேலும், படத்தின் டீசர் வெளியாகிவிட்டட் நிலையில், விரைவில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்