கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!
கங்குவா படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தியேட்டரில் சத்தத்தை (VOLUME) 2 புள்ளிகள் குறைக்க ஞானவேல் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் இந்த ஒரு வாரம் படத்திற்கு வசூல் ரீதியாக ஒரு சுமாரான ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படம் வெளியான முதல் நாளிலே கலவையான விமர்சனங்கள் பெறுவதற்கு முக்கியமான காரணமே படத்தினுடைய சவுண்டிங் தான். இசை முதல் சவுண்டிங் வரை படம் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை உண்டு செய்ததாக மீம்ஸ் செய்து கலாய்த்து வந்தனர்.
அதே சமயம் சவுண்ட் அதிகமாக இருந்த காரணத்தால் வயதானவர்கள் படத்திற்கு வரும்போது அவர்களுக்கு சீரமத்தை உண்டு செய்யும் வகையில் இருப்பதால், சவுண்டை கொஞ்சம் குறைத்து ஒளிபரப்பு செய்யதால் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வந்தனர். எனவே, இப்படி விமர்சனத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அது என்னவென்றால், அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடம் சத்தத்தை 2 புள்ளிகள் குறைக்கச் வேண்டுகோள் வைத்துள்ளார். எனவே, இதன் மூலம் அதிகமான சவுண்டிங் பிரச்சனை இருக்காது என்பதால் படத்தை பார்க்கலாம்.
மேலும், கங்குவா படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகமும் எடுக்கப்படும் என ஏற்கனவே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதி தெரிவித்து இருந்தார். படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும் அந்த முடிவில் பின்ன வாங்கமுடியாது என்பது போல, அஜித் படத்தை முடித்த பிறகு சிவாவின் சம்பவம் கங்குவா 2 தான் என்கிறார் ஞானவேல் ராஜா.