கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் பாசிட்டிவ் பற்றியும் நெகட்டிவ் பற்றியும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்திற்கு கடந்த 6 மாதங்களாகவே அதிகப்படியான ப்ரோமோஷன்களை படக்குழு செய்து வந்தது.
இந்த நிலையில் இன்று (நவ.14) கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இதனால், இன்று காலை தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்களும் திருவிழா போல கொண்டாடி வந்தனர். பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸான கங்குவா திரைப்படத்தைக் குறித்து ரசிகர்கள் இணையத்தில் அவர்களை கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, கலவையான விமர்சனமே கங்குவா திரைப்படத்திற்கு கிடைத்து வருகிறது. இதனால், கங்குவா திரைப்படத்தில் அமைந்துள்ள பாஸ்டிவ்களையும், நெகட்டிவ்ககளையும் பற்றி ரசிகர்கள், நெட்டிசன்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
பாசிட்டிவ் என்ன?
- கங்குவா திரைப்படத்தில் இரண்டு காலகட்டங்கள் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. அதில், பீரியாடிக் அதாவது
- கங்குவா வரும் காலகட்டம் பாசிட்டிவாக அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
- அதிலும், காண்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அனைத்தும் பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.
- அதே போல, கங்குவா கதாபாத்திரம் மற்றும் அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்திய ஆடை வடிவமைப்புகள், அவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்கள், என அனைத்தும் வியப்படையும் வண்ணமாக அமைந்துள்ளது, அது படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
- அடுத்தது, படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் ப்ரமிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.
- அதே போல, படத்தில் ஒரு சில சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களும் இந்த படத்திற்கு பாசிடிவ்வாக உள்ளது என ரசிகர்கள் கூறுகின்றனர்.
நெகட்டிவ் என்ன?
- படத்தின் முதல் 35 நிமிடங்கள், மிகவும் மெதுவாகவும் படத்திற்கு ஓட்டத வண்ணமாவும் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
- மேலும், படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரம் இருக்கிறதாம், அந்த கதாபாத்திரம் எந்த வகையிலும் படத்திற்கு கைக்கொடுக்கவில்லை.
- அதன்பின், நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெரிதாக கைகொடுக்காமல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
- அதே போல, திரைக்கதையும் கதைக்கு ஏற்றது போல இல்லாமல் இருந்ததால், சலிப்பு தன்மை ஏற்படுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
- குறிப்பாக ரசிகர்களும் பெரிய நெகடிவாக முன்வைப்பது என்னவென்றால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரமும் அடிக்கடி கத்திக்கொண்டே வசனம் கூறுவது தான். அது பார்ப்போரை சலிப்படைய வைப்பதாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.