பஞ்சபூதங்களில் சண்டை காட்சி…மிரட்ட காத்திருக்கும் கங்குவா திரைப்படம்!
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அவ்வப்போது, இப்படம் பற்றிய புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், தற்பொழுது ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தின் சண்டை காட்சிகளுக்கு படக்குழு மெனக்கெட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று தண்ணீருக்கு அடியில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அண்மையில், வெளியான இப்படத்தின் மேக்கிங் வீடியோவில் கூட அந்த அளவுக்கு பிரமாண்டமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதுபோல், இந்த படத்தில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை ஐம்பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐம்பூதங்களிலும் இப்படத்தில் சண்டை காட்சிங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு காட்சியும் ‘மிரட்டல்’ தான்! கங்குவா அப்டேட் விட்ட பிரபலம்!
ஒவ்வொரு காட்சியும் மிரட்டல்
அதேபோல், இந்தப்படத்தில் பணியாற்றி வரும் மதன் கார்க்கி சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, “இந்த படத்தில் வரும் பீரியட் போர்ஷன் ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது. இதற்காக புதிதாக நிலம், மாந்தர்கள், வட்டார வழக்கு என பல விஷயங்களை செய்துள்ளோம். அனைத்தையும் விட புதிதாக ஒரு கடவுளையும் உருவாக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
செம மாஸ்! வெறித்தனமான லுக்கில் நடிகர் சூர்யா…வெளியான ‘கங்குவா’ பர்ஸ்ட் லுக்.!
எப்பொழுது ரிலீஸ்
இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 11 -ஆம் தேதி 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.