விரைவில் காஞ்சனா 4..! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு…
ருத்ரன் படம் வெற்றியை தொடர்ந்து, காஞ்சனாவின் அடுத்த பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வார இறுதியில் வெளியான ‘காஞ்சனா 3’ திரைப்படத்திற்கு பிறகு, ராகவா லாரன்ஸின் நடிப்பில் உருவான ‘ருத்ரன்’ திரைப்படம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் அதே தமிழ் புத்தாண்டை மீண்டும் தேர்வு செய்து ஏப்ரல் 14-ல் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தேவையான வசூலை எடுத்துவிட்டது என்று கூறலாம். இப்படம் முதல் வார இறுதியில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தற்போது, இந்த திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், காஞ்சனாவின் அடுத்த பாகத்திற்கு கதை எழுதிக் கொண்டிருப்பதாகராகவா லாரன்ஸ் கூறினார்.
மேலும், அவர் நடித்து வரும் சந்திரமுகி-2, ஜிகர்தண்டா-2 ஆகிய 2 படங்களின் ஷூட்டிங்கும் முடிவடையும் தருவாயில் உள்ளதால், இனிமேல் அடுத்தடுத்து தனது படங்கள் வெளியாகும் எனவும் உறுதியளித்துள்ளார்.