சுசிலீக்ஸ் போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவுகள் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று அவர் ஒரு முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இவர் நயன்தாரா நடித்த அனாமிகா, சாய்பல்லவி நடித்த பிடா உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
ஸ்ரீரெட்டி தன் முகநூல் பதிவில் “அந்த இயக்குனர் தெலுங்கு பெண்கள் படுப்பதற்கு மட்டும்தான் – வேறு எதற்கும் தகுதியானவர்கள் இல்லை. அவர் உங்களுடன் வீடியோ காலில் பேச என்னவேண்டுமானாலும் செய்வார். மேலும் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதில் அவர் வல்லவர். இளம் நடிகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் சேகர் கம்முலா ட்விட்டரில் இந்த குற்றச்சாட்டுக்கு கோபமாக பதிவிட்டுள்ளார். “அவர் சொன்னது முற்றிலும் பொய். அவரை நான் நேரில் பார்த்ததில்லை, போனில் கூட பேசியதும் இல்லை. இப்படி ஆதாரமே இல்லாமல் குற்றம்சாட்டுவது எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிக மனவருத்தத்தை கொடுத்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…