என் படம் ஓடாமல் போனதற்கு கமல் தான் காரணம் விவேக் பரபரப்பு குற்றசாட்டு
- கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக்.
- இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவருடைய காமெடிகளில் சமுதாயத்திற்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு விஷயங்களும் இருக்கும்.இவருடைய படங்களில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு கருத்துக்களை எப்படியும் கூறிவிடுவார்.
இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார். இவர் சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இதையடுத்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய கேரியரில் முக்கிய படமாக இருந்தது “இவன் தான் பாலா ” அந்த படம் வெளியான நேரத்தில் கமலின் பாபநாசம் வெளியாகி என்னுடைய படத்தை நாசமாக்கி விட்டது. இதனால் நான் கமலை குற்றம் சாட்டவில்லை. எனக்கு நடந்ததை பற்றி நான் பேசினேன் என்று கூறியுள்ளார்.