மீண்டும் வெற்றி விழா? விரைவில் ‘அமரன்’ கொண்டட்டம்! கமலின் பிரம்மாண்ட திட்டம்!

அமரன் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன், படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளராம்.

Amaranth Victory Ceremony

சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால்,  சிவகார்த்திகேயன் கேரியரிலும் அதிக வசூல் செய்த படமாக அமரன் மாறியுள்ளது.

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம், மக்கள் வரவேற்பால ரூ.300 கோடியை கடந்து வசூலை வாரி குவித்து வருகிறது.

இன்னும் வெற்றிநடை போடுவதால் ரூ.400 கோடிவரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படம் ரூ.130 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை  ரூ.350 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன், படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளராம். ஏற்கனவே, இந்தப் படம் வெற்றியின் மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு கடந்த நவ.19ம் தேதி பிரியாணி விருந்து வைத்திருந்தார். ஏற்கனவே, இந்த படத்தின் சக்சஸ் மீட் ஒன்று நவ, 4-ம் தேதியே படக்குழுவினர் நடத்தினர்.

இப்பொழுது, வசூல் ரூ.300 கோடியை மீண்டும் ஒரு வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்தவும் அதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். விரைவில் இது குறித்து அறிவிப்பை படக்குழு அறிவிக்கும் என்றும், விழாவில் விருதுகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்