நேரத்தை போக்க இயற்கையான முறையில் சோப்பு தயாரிக்கும் கமலஹாசன் மகள்!
கடந்த சில காலங்களாக சீனாவை அச்சுறுத்தி வந்த இந்த கொரோனா வைரஸான, பல உயிர்களையும் காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் 700-க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ள நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தனது வீட்டில் தனிமையாக இருக்கும் போது, தன் நேரத்தை போக்க இயற்கை முறையில் சோப்பு தயாரிப்பதாகவும், இதற்கான பார்முலாக்களை சோப்பு நிறுவனம் ஒன்றிடம் கேட்டறிந்த இவர் இதுவரை 10 சோப்புகளை தயாரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.