Unnaipol Oruvan: எந்த மசாலாவும் இல்லாமல் ரீமேக் படத்தில் வென்ற கமல்! ‘உன்னைப்போல் ஒருவன்’ கதையின் சிறப்பு!

Unnaipol Oruvan

அறிமுக இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்கிய ‘உன்னைப்போல் ஒருவன்’ 2009 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படம். இந்திய சாமானியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் ஈநாடு என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.

கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ 14 வருடங்களுக்கு முன், 2009 (செப்டம்பர் 18) இதே தேதி வெளியானது, இன்றுடன் இந்த திரைப்படம் 14 வருடங்களை நிறைவு செய்தது. இது பாலிவுட்டில் நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008-ல் வெளியான எ வெட்னஸ்டே (A wednesday) என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

இயக்குனர் நீரஜ் பாண்டே, 2006 செப்டம்பர் 11 அன்று மும்பை ரயலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருப்பார். ஆனால், உன்னைப்போல் ஒருவன் சென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இங்கு மும்பை போல் குண்டு வெடிப்பு நடக்கவில்லை. அதனால் படத்தில் எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை அனைவரும் மறந்ததை ஞாபகப்படுத்தி பேசியிருப்பார் கமல்.

அதுபோல், படத்தில் வரும் சம்பவத்தை யாருக்கு நினைவில் இருக்க போகிறது என்று விமர்சனம் செய்பவர்களை தடுக்க, கமல் சொன்ன வரத்தை தான் “மறதி ஒரு தேசிய வியாதி” என்ற வசனம்.  இப்படி, படங்களில் வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் தனிவிதம். இந்த வசனமே படத்திற்கு ஒரு அடித்தளமாக மாறியதோ என்னவோ தெரியவில்லை. இந்த திரைப்படத்தில், கமலின் பெயர் கூட குறிப்பிடப்பட மாட்டாது, சொல்லப்போனால் இந்த படத்தில் கமல் கதாபாத்திரத்துக்கு பெயர் ஒன்றை கிடையாது.

கார் -பைக் சேஸிங், பிரம்மாண்ட சண்டைக் காட்சி, மசாலா பாடல்கள், காமெடி போர்ஷன்கள் என எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல், ஒரு பாலிவுட் ரீமேக் படத்தில், ஒற்றை ஆளாக அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் கமல். படத்தில் ஒரு காட்சியில் மோகன்லால், கமலை பார்த்து நீ யார்… ஹிந்து வா? முஸ்லீம் ஆ? என்று ஆரம்பிக்கும் ஒரு 5 நிமிட காட்சி படத்தின் முக்கிய காட்சியாக அமைந்திருக்கும்.

இப்படி ஒவ்வொரு காட்சிகளும் பார்வையளர்களுக்கு அர்த்தமுள்ள காட்சிகளை வழங்கி வெற்றி பெற்றிருப்பார் படத்தின் இயக்குனர். படத்தின் ஒன்லைனரின் படி, ஒரு சாமானிய மனிதன் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பயங்கரவாதிகளை விடுக்க, அரசுக்கு பல நெருக்கடி கொடுத்து அவர்களை விடுதலை செய்ததும், அந்த குற்றவாளிகளை கொலை செய்வதுதான் படத்தின் கதைச்சுருக்கம்.

65 நாட்களில் இந்த திரைப்படத்தை எடுத்து முடித்தனர். இப்படத்திற்கு கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு ரீமிக்ஸ் படத்தில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்