கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ’ஜிங்குச்சா’ பட்டையை கிளப்பி வருகிறது.

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான் இசையில், தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் “ஜிங்குச்சா” வெளியாகியுள்ளது. கமலே எழுதியிருக்கும் இப்பாடல் கல்யாண நிகழ்வை மையமாக கொண்டுள்ளது.
இதில் சன்யா மல்ஹோத்ரா சிம்புடன் பாடி நடனமாடுகிறார். கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ள இந்தப் பாடலுக்கு வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஆதித்யா ஆர்.கே ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். பாடலில் நடனமாடும் சன்யா மல்ஹோத்ரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அது மட்டும் இல்லமல், சிம்புவும் கமலின் நடனமும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களைப் பெற்ற பிறகு, கமல் தனது கைவரிசையில் இந்தியன் 3, கல்கி 2 மற்றும் தக் லைஃப் படங்களை வைத்துள்ளார். இதில், ‘தக் லைஃப்’ திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், மகேஷ் மஞ்ச்ரேக்கர் என பலர் நடித்துள்ளனர். ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் இந்தப் படம், சென்னை, டெல்லி, ரஷ்யா மற்றும் புதுச்சேரி போன்ற கவர்ச்சிகரமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.