கமலின் பட நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார் எனவும், அந்த படத்தை மாலிக் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார் எனவும், இந்த படத்திற்கான திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும் கூறப்படுகிறது.
தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்கி பல சம்பவங்களை செய்ய தயாராகி கொண்டிருக்கிறார் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அடுத்தாக விக்ரம் திரைப்படம் படு வேகமாக தயாராகி வருகிறது.
விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். அடுத்த வருட கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கடுத்து, மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலை வைத்து மாலிக் சென்சேஷனல் ஹிட் கொடுத்த இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.
அந்த மாலிக் படத்தின் கதையோட்டம் அப்படியே கமலின் நாயகன் போல அமைந்திருக்கும். அதுவும் படத்தின் மேக்கிங்கும், ஃபகத்தின் நடிப்பும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்திருக்கும். அவரது இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்றதுமே ரசிகர்கள் படம் எப்படி வர போகிறதோ என எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தற்போது வெளியான தகவலின் படி, கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் நடிக்க உள்ளனர். அந்த படம் தான் இந்த மகேஷ் நாராயணன் திரைப்படம் எனவும், இதில் கதை திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும், கமல் சின்ன கௌரவ தோற்றத்தில் மட்டும் நடிக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…