ரஜினிகாந்த் எந்த கட்சியின் தலைவர்?முதலில் கட்சித் தொடங்கட்டும்….பாயும் கமல் …..

Published by
Venu

கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என  தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனும்,ரஜினியும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் அப்படித்தான் இருக்கிறார். எனவே அது பற்றி விமர்சிக்க முடியாது” என பதிலளித்தார்.

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஈரோட்டில் நடத்திய விவசாயிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர், ரஜினிகாந்த் ஒரு கட்சியின் தலைவர் என நிரூபர் கேள்வி கேட்க முயல, ரஜினி எந்த கட்சியின் தலைவர் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். அதன் பின் அவர் பேசியதாவது:

அவர் வரட்டும், கட்சி தொடங்கி அதற்குப் பெயர் வைக்கட்டும். நான் ‘மக்கள் நலன்’ என்று ஒரு வார்த்தையில் கொள்கையை சொல்லியிருக்கிறேன். இதைப்போல அவரும் அவருடைய கொள்கையைச் சொல்லட்டும்.

அதன்பிறகு இரண்டும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அப்படி பொருந்தவில்லை என்றால், அப்பொழுதும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன். அவருடைய கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன். இது எங்கள் அரசியல் மாண்பு.

ரஜினி கட்சித் தொடங்கிய பின்னர், அவருடைய கொள்கைகளை அறிந்தபின்னர் அதில் எங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது கடுமையானதாக இருக்கும். பாராட்டுக்கள் இருந்தால் அது திறந்த மனதுடன் இருக்கும் என அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

11 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

13 minutes ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

1 hour ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

2 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

2 hours ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 hours ago