நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கமல் – மணிரத்னம்! ஆண்டவர் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்?
கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு புது படத்தில் இணைந்துள்ள நிலையில், அந்த படத்திற்கான லுக் டெஸ்ட் இன்று நடைபெறுகிறது.
KH234
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் கடைசியாக கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்கள். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் எந்த திரைப்படத்திலும் நடிக்கவே இல்லை. இந்த நிலையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 36 -ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தில் இணைந்துள்ளார்கள்.
கால்ஷீட் இல்லை…கமலுடன் நடிக்க மறுத்த த்ரிஷா.! ஓகே சொல்வாரா நயன்தாரா..?
இவர்கள் இருவரும் இணைந்த இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக “KH234″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் 234-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு இப்படி தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 36 -ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
போட்டோஷூட்
இந்நிலையில், “KH234” படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .இதற்கிடையில். படத்தின் லுக் டெஸ்ட் அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியிட படக்குழு திட்டமிட்டு கமல்ஹாசனை வைத்து அதற்கான போட்டோஷூட்டை இன்று எடுக்கிறது. எனவே, விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆண்டவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்
நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதனையடுத்து அதே தினத்தில் “KH234” படத்திற்கான முதல் தோற்ற வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான படப்பிடிப்பு தான் இன்று நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KH234 குறித்து கமல்ஹாசன்
மணிரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேசியதாவது ” நானும் அவரும் ஒரு படத்தில் இணைக்கிறோம் என்றால் அந்த படத்தில் எதோ பெரிதாக இருக்கிறது என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான நாயகன் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.