தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல முயற்சிகளை எடுத்து ரசிகர்களால் அன்புடன் “உலகநாயகன்” என்று அழைக்கப்படும் கமலஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனை முன்னிட்டு நேற்று கமல்ஹாசன் நடிக்கவுள்ள 234-வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கமலின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாவும், படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகன் படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
மேலும் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேளைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…