நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கமல் – மணிரத்னம் கூட்டணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Default Image

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல  முயற்சிகளை எடுத்து ரசிகர்களால் அன்புடன் “உலகநாயகன்” என்று அழைக்கப்படும் கமலஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு நேற்று கமல்ஹாசன் நடிக்கவுள்ள 234-வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கமலின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாவும், படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகன் படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

மேலும் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேளைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi