கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படமும், அவர் வில்லனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில், அதன் இரண்டாம் பாகம் 2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கியது.
பின்னர், படப்பிடிப்பு சீராக சென்று கொண்டிருக்க, 2020-ல் படப்பிடிப்பின்போது ஒரு பெரிய விபத்து ஒன்று ஏற்பட, இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. 2022 -ல் கொரோனாவுக்கு பின், தூசி தட்டி 2023-ம் ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இப்படி காலங்கள் கடந்து உருவாகி ஒரு வழியாக இந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாமல் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.
மே மாதம் சம்மர் கொண்டாட்டம் என்பதால், பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டலாம் என்று படக்குழு யோசிக்க, அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 AD” படத்தில் வில்லனே, நம் கமல்ஹாசன் தான்.
இதில், கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் மே மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லனாக அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடித்திருக்கிறார், அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஐந்து வருடங்களாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படமும் மே மாதம் தான் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியான நிலையில், அவர் நடித்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோதும் நிலையில் சிக்கியுள்ளது.
இதனால், பாக்ஸ் ஆபிஸில் சிக்கல் ஏற்படும் அபாயாமும் ஏற்படும், எது என்னவோ கமலுக்கு தெரியாதது ஏதும் இல்லை, ரிலீஸ் தேதியில் சரி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…