தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் கமல்.! காத்திருக்கும் பெரிய சம்பவம்…

kamal haasan

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படமும், அவர் வில்லனாக நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ திரைப்படமும் மே மாதத்தில் வெளியாகவுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியானதை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பில், அதன் இரண்டாம் பாகம் 2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2019-ல் படப்பிடிப்பு தொடங்கியது.

பின்னர், படப்பிடிப்பு சீராக சென்று கொண்டிருக்க, 2020-ல் படப்பிடிப்பின்போது ஒரு பெரிய விபத்து ஒன்று ஏற்பட, இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. 2022 -ல் கொரோனாவுக்கு பின், தூசி தட்டி 2023-ம் ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. இப்படி காலங்கள் கடந்து உருவாகி ஒரு வழியாக இந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாமல் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

மே மாதம் சம்மர் கொண்டாட்டம் என்பதால், பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டலாம் என்று படக்குழு யோசிக்க, அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 AD” படத்தில் வில்லனே, நம் கமல்ஹாசன் தான்.

READ MORE – கல்லா கட்ட படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்! இந்தியன் 2 ரிலீஸ் குறித்த அப்டேட்!

இதில், கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்கி 2898 AD படத்தின் ரிலீஸ் தேதி நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் மே மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லனாக அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த படத்தில் நடித்திருக்கிறார், அந்த திரைப்படத்தின் ரிலீஸ்  தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஐந்து வருடங்களாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படமும் மே மாதம் தான் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியான நிலையில், அவர் நடித்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோதும் நிலையில் சிக்கியுள்ளது.

READ MORE – கல்கி கி.பி 2898 படத்தில் நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளம்? மிரண்டு போன பாலிவுட்!!

இதனால், பாக்ஸ் ஆபிஸில் சிக்கல் ஏற்படும் அபாயாமும் ஏற்படும், எது என்னவோ கமலுக்கு தெரியாதது ஏதும் இல்லை, ரிலீஸ் தேதியில் சரி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்