கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அல்போன்ஸ் பாடிய பாடலுக்கு உலக நாயகன் பேசினாய் நெகிழ்ச்சியான ஆடியோ பதிவை நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
பிரேமம் படத்தை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறி, திரைப்படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், 69வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் கமல்ஹாசனுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடலை பாடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த வாழ்த்து செய்தி கமலிடம் சென்றடைவில்லையாம். அவருக்காக தனது சொந்த குரலில் பதிவுசெய்த அந்த பாடலை கமல்ஹாசனுக்கு அனுப்ப பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் தோல்வியடைந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், அதை கமல்ஹாசனுக்கு அனுப்புமாறு நடிகரும் இயக்குனருமான பார்த்திபனை தொடர்பு கொண்டுள்ளார்.
உடனே, அல்போன்ஸ் புத்திரன் உதவி செய்த பார்த்திபன் அந்த வாழ்த்து பாடலை கமலிடம் கொண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில், அந்த வாழ்த்து செய்தியை அறிந்த கமல் அல்போன்ஸ் புத்திரனுக்கு பதிலளிக்கும் வகையில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கமல் பேசுகையில், “அல்போன்ஸ் புத்திரனின் பாடலைக் கேட்டேன். அவர் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன்.
திரைப்படங்களை இயக்குவதை நிறுத்துகிறேன்! ‘பிரேமம்’ இயக்குனர் அதிர்ச்சி அறிவிப்பு!
ஆனால், அவர் மனதளவில் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. அவரது குரல் அதை பிரதிபலிக்கிறது. நான் அவரை வாழ்த்துகிறேன். சந்தோஷம், அவர் படங்களில் இருந்து விலகும் முடிவை எடுத்திருந்தாலும், அவர் உடல்நிலையை கவனித்துக் கொள்ளட்டும். கவனித்துக் கொள்ளுங்கள் அல்போன்ஸ்” என்று நலம் விசாரித்துள்ளார்.
மேலும், கமல்ஹாசன் பேசிய இந்த ஆடியோவை வெளியிட்ட பார்த்திபன், ‘ப்ரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி “எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன், நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?”
அவருகாக கமல் சாரை அணுகினேன். அதற்களித்த பதிலது. வரிசை கட்டிக்கொண்டு படங்கள், சொந்த பட வேளைகள், பிக் பாஸ், அரசியல் பணிகள், இப்படி அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலையிலும் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு டானிக் அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை மனப்பூர்வமாக பகிர்ந்தேன்.
மக்கள் ரசிக்காங்க அதான் அப்படி பட்ட படங்களில் இறங்கிட்டேன்! ஹன்சிகா ஓபன் டாக்!
அதை கேட்டு பெட்டி பெட்டியாக இயக்குனர் எனக்கு நன்றி அனுப்பினார். உடல் நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால் வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது. இதைச் சொல்லக் காரணம் போய் கூட, அடுத்தவரின் புன்னகைக்கு காரணமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கடைசியாக நடிகை நயன்தாரா, நடிகர் பிரித்திவ் ராஜ் ஆகியோரை வைத்து கோல்டு எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…