‘ராஜ் கமல் பிலிம்ஸ்’ தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல், தனதுராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார்.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான சிறிய வீடியோ ஒன்றையும், ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் BLOODandBATTLE என்று தலைப்பு வருகிறது அத்துடன் பெரிய கத்தி ஒன்றும் வருகிறது. எனவே படம் அதிரடியான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தெரிகிறது.
மேலும், ஏற்கனவே, சிம்புவின் 48-வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. எனவே, நாளை வெளியாகும் அறிவிப்பில் சிம்பு படம் பற்றி தான் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…