சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தனுஷ், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து தற்போது நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் தற்போது ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு போட்டி இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருக்கவேண்டும். சினிமாவில் போட்டியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்றே சொல்லலாம்.
ஒன்லி ஒன் சூப்பர் ஒன்! இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்!
அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இருவரும் இணைந்து 16 வயதினிலே, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தப்பு தாளங்கள், ஆடு புலி ஆட்டம், வயசு பிலிச்சிண்டி, உருவங்கள் மறலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…