கமல்ஹாசன் -ரஜினிகாந்திற்கு கிடைக்காத பெருமை கேப்டனுக்கு கிடைச்சிருக்கு! என்ன தெரியுமா?
தமிழ் சினிமா : ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சினிமாத்துறையில் ரஜினிகாந்த் -கமல்ஹாசன் என்ற போட்டி இருந்து வருகிறது. இவர்களுடைய படங்கள் அந்த காலத்தில் ஒரே தினத்தில் வெளியானால் கூட எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்ற போட்டி நிலவி வந்தது. இவர்கள் இருவருக்குள் தான் போட்டி என்ற அந்த சமயம் விஜயகாந்தும் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு போட்டியாகவும் வந்தார்.
அப்படி போட்டியாக வந்த விஜயகாந்திற்கு கமல்ஹாசன் – ரஜினிகாந்திற்கு கிடைக்காத பெருமை ஒன்றும் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், 100-வது படத்தின் வெற்றி தான். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அனைவர்க்கும் தங்களுடைய 50வது – மற்றும் 100-வது படங்கள் வெற்றி படமாக அமையவேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு.
ஆனால், ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்களுடைய 100-வது படம் வெற்றி படமாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த விஷயத்தில் தான் கமல்ஹாசன் -ரஜினிகாந்திற்கு கிடைக்காத பெருமை விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது. ஏனென்றால், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அவருடைய 100-வது படமான ‘ராஜ பார்வை’ படம் தோல்வியை சந்தித்தது.
1981 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படத்தினை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். இந்த படம் கமலின் 100 -வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது.
அதைப்போல, ரஜினிகாந்தின் 100-வது திரைப்படமான ‘ஸ்ரீ ராகவேந்திரா’ திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தினை எஸ். பி. முத்துராமன் இயக்கி இருந்தார். இந்த படமும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது.
ஆனால், விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் தமிழ் படங்களில் ஒன்றாக மாறியது, தியேட்டர்களில் 500 நாட்களுக்கு மேல் ஓடியது. எனவே, 100 -வது படம் வெற்றி பெற்ற பெருமை ரஜினிகாந்த். கமல்ஹாசனுக்கு கூட கிடைக்கவில்லை கேப்டன் விஜயகாந்திற்கு கிடைத்துள்ளது.